மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தமிழகம்: 3.16 கோடியைக் கடந்த மின்பயனீட்டாளர்கள்!

தமிழகம்: 3.16 கோடியைக் கடந்த மின்பயனீட்டாளர்கள்!

தமிழகத்தில் மின்பயனீட்டாளர்கள் எண்ணிக்கை 3.16 கோடியை கடந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ‘தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் வீடுகளுக்கு 2.12 கோடி இணைப்புகளும், வணிகத்துக்கு 36.44 லட்சம் இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கு 7.47 லட்சம் இணைப்புகளும், விவசாயத்துக்கு 21.40 லட்சம் இணைப்புகளும், குடிசைகளுக்கு 11.20 லட்சம் இணைப்புகளும், இதர பிரிவில் 14.17 லட்சம் இணைப்புகளும், உயர்மின் அழுத்த பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 10,229 என மொத்தமாக 3.3 கோடிக்கும் மேலான மின் இணைப்புகள் இருந்தன.

இதன்பிறகு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய மின் இணைப்புகளை பெற்று வருவதால், தற்போது மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் வீடுகளுக்கு 2.27 கோடி இணைப்புகளும், வணிகத்துக்கு 35.37 லட்சம் இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கு 7.38 லட்சம் இணைப்புகளும், விவசாயத்துக்கு 21.81 லட்சம் இணைப்புகளும், குடிசைகளுக்கு 9.89 லட்சம் இணைப்புகளும், இதர பிரிவில் 14.30 லட்சம் இணைப்புகளும், உயர் மின் அழுத்த பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 10,030 என மொத்தமாக 3.16 கோடிக்கும் மேலான மின் இணைப்புகள் உள்ளது. இது முந்தைய கணக்கீட்டை விட அதிகமாகும்.

இதையடுத்து மின்நுகர்வும் அதிகரித்துள்ளது. அதாவது வீடுகளுக்கு 32,714 மில்லியன் யூனிட், வணிகத்துக்கு 6,738 மில்லியன் யூனிட், தொழிற்சாலைகளுக்கு 8,384 மில்லியன் யூனிட், விவசாயத்துக்கு 12,956 மில்லியன் யூனிட், குடிசைகளுக்கு 393 மில்லியன் யூனிட், இதர பிரிவில் 3,242 மில்லியன் யூனிட் என மொத்தம் 93,344 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து புதிதாக மின் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடுத்து வரும் நாட்களில் மொத்த மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 15 செப் 2021