மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தொடர் மழை: பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு!

தொடர் மழை: பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு!

கூடலூரில் தொடர் மழையால் தொழிலாளர்கள் வருகை குறைந்துள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு அவை முதிர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியதும் கூடலூர் பகுதியிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடப்பாண்டில் பருவமழை சரிவர பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் பலத்த மழை பெய்து வருகிறது.

நாடுகாணி உள்ளிட்ட சில இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடும் குளிர் மற்றும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது.

இதன் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சில தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தாலும் தொடர் மழையால் பச்சைத் தேயிலையை இயல்பாக பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் சிறு விவசாயிகள் தோட்டங்களிலும் பச்சை தேயிலை பறிக்காமல் விடப்பட்டதால் அவை முதிர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சிறு விவசாயிகள், “கூடலூர் பகுதியில் பருவமழை மிக தாமதமாக பெய்து வருகிறது. சரியான நேரத்தில் மழை பெய்தால் மட்டுமே இஞ்சி, குறுமிளகு உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மழை தாமதமாக பெய்ததால் குறுமிளகு விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல் மோசமான காலநிலையால் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு தொழிலாளர்கள் சரிவர வருவதில்லை. இதனால் பச்சை தேயிலை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும், உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 15 செப் 2021