மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

கொரோனா குறித்த தவறான தகவல்: முதலிடத்தில் இந்தியா!

கொரோனா குறித்த தவறான தகவல்: முதலிடத்தில் இந்தியா!

சமூக வலைதளங்களில் கொரோனா குறித்த தவறான தகவல் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் இணைய பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் தகவல் பகிரப்படுகிறது. ஆனால் அவ்வாறு பகிரப்படும் தகவல்களின் பெரும்பாலானவை போலியானவைதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் கொரோனா தொற்று பரவி வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்து இருந்தாலும், மூன்றாவது அலை குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் அது குறித்த தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரப்பப்படுகிறது.

இதுகுறித்து கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகமத் சகீர் அல் ஜமான், சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு ‘138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு’ என பெயரில் சர்வதேச நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்படுவதில் 18 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்திலும், 9 சதவிகிதத்துடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 8.57 சதவிகிதத்துடன் பிரேசில் மூன்றாம் இடத்திலும் 8.03 சதவிகிதத்துடன் ஸ்பெயின் நான்காம் இடத்திலும் உள்ளன.

84 சதவிகித தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரவுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய பயன்பாடு குறித்த போதுமான வழிப்புணர்வு இல்லாமையும், சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்தமையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-வினிதா

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

புதன் 15 செப் 2021