மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

கோயில் நிலங்களை அபகரித்தால் குண்டர் சட்டம்!

கோயில் நிலங்களை அபகரித்தால் குண்டர் சட்டம்!

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருக்கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது. தற்காலிக நீக்கம் செய்ததை எதிர்த்து அறங்காவலர் ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 15) நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்ற 4 பேருக்கு எதிரான தற்காலிக நீக்கத்திற்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளதாக கூறி, ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.மேலும், சட்டப்படி விசாரணையை தொடர அனுமதி அளித்தார்.

அதே சமயம், கோயில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டுமென அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், கோயில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, கோயில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல் எண்களை அனைத்து கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவையில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 15 செப் 2021