மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

ஒரேபள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா!

ஒரேபள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா!

திருப்பூரில் சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனுடன் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளியிலுள்ள 220 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனுடைய முடிவுகள் இன்று வெளியானது. இதில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உத்தரவின்பேரில் சின்னசாமி அம்மாள் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மற்றும் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 15 மாணவர்கள், 9 ஆசிரியர்கள், ஒரு வட்டார கல்வி அலுவலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதுகுறித்தான அறிக்கை இன்று முதல்வரிடம் பள்ளி கல்வித்துறை சமர்ப்பிக்கவுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளோடு அந்தந்த மாவட்டங்களும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜபோபால் சுங்கரா,” கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரி விடுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிக்க வரும் அனைத்து மாணவ, மாணவிகளும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம். தடுப்பூசி செலுத்தியிருந்தாலுமே, வெளி மாநிலத்திலிருந்து வரும் மாணவ, மாணவிகளை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளாமல் மாணவ, மாணவியர்களை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்வி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 15 செப் 2021