மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: சீரகக் கஞ்சி!

ரிலாக்ஸ் டைம்: சீரகக் கஞ்சி!

பதமாக பக்குவமாக சுவையாக அரிசி கஞ்சி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கஞ்சி தயாரிக்கும் போது இறைச்சி, மீன் மற்றும் சுவைகள் போன்ற கூடுதல் பொருட்கள் சேர்க்கப்படும்போது, இது பெரும்பாலும் குறிப்பாக நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு ஓர் உணவாக வழங்கப்படுகிறது. இந்த சீரகக் கஞ்சி அனைவருக்கும் ஏற்றது. உடனடி புத்துணர்ச்சி தருவது.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் அரை கப் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும். ஒரு கப் சீரகச் சம்பா அரிசியைக் களையவும். கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, நான்கு உரித்த பூண்டுப் பற்கள், தோலுரித்த ஆறு சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய மூன்று பச்சை மிளகாய், ஐந்து கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி... அரை கப் தேங்காய்த் துருவல், கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறியபின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி... சிறிய துண்டு பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த அரிசி - பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, எட்டு புதினா இலைகள் தூவி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 15 செப் 2021