மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: சோளச் சுண்டல்!

கிச்சன் கீர்த்தனா: சோளச் சுண்டல்!

நவராத்திரி தொடங்கும் அற்புத வெற்றி கொடுக்கும் மாதமும் புரட்டாசியே. கேதார கௌரி விரத ஆரம்பம், ஸித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், மகாலட்சுமி விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், சஷ்டி - லலிதா விரதம், கபிலா சஷ்டி விரதம், மஹாளய பட்ச ஆரம்பம் என விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதமும் புரட்டாசியே. இந்த மாதத்தில் ஏராளமான சத்துகள்கொண்ட சோளத்தில் சுண்டல் செய்து உண்பது என்பது வித்தியாசமானதும் சுவையானதும்கூட.

என்ன தேவை?

அதிகம் முற்றாத சோளம் - ஒன்று

மிளகு - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - அரை கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - 2 சிட்டிகை

எப்படிச் செய்வது?

சோளத்தை உரித்து முத்துகளை எடுத்து அலசி உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயில்லாமல் தேங்காய்த் துருவலை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய்விட்டு சோள முத்துகளைப் போட்டு வதக்கி, பொடித்த மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதில் தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து அம்பிகைக்குப் படைக்கலாம். மாங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவினால் இன்னும் சுவை கூடும்.

நேற்றைய ரெசிப்பி: அதிரசம்

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 15 செப் 2021