மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம்கட்ட பணிகள் கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரை இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் எவ்வித போக்குவரத்து மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்ல கூடிய வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் போலீஸ் நிலையம் வரை சென்று, பின் வலது புறம் திரும்பி, இரண்டாவது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, ராஜமன்னார் சாலை 100 அடி சாலை வழி போரூர் சாலிகிராமம் செல்லலாம்.

அதேபோல கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி துரைசாமி சாலை மற்றும் ஆற்காடு சாலை வழியாக செல்லலாம். மேலும் துரைசாமி சாலை வழியாக பவர் ஹவுஸ் செல்ல கூடிய வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.

ஆனால் பவர் ஹவுஸிலிருந்து ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பு செல்லக்கூடிய வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல் அம்பேத்கர் சாலையிலிருந்து அசோக் நகர் போலீஸ் நிலைய சந்திப்பு வரை அனுமதிக்கப்பட கூடிய வாகனங்கள், அசோக் நகர் போலீஸ் நிலையம் சந்திப்பிலிருந்து, அம்பேத்கர் சாலைக்கு செல்வதற்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 14 செப் 2021