மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

இந்தியர்களின் வங்கிக் கணக்கு: இந்தியாவிடம் அளிக்கும் சுவிட்சர்லாந்து!

இந்தியர்களின் வங்கிக் கணக்கு: இந்தியாவிடம் அளிக்கும் சுவிட்சர்லாந்து!

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இம்மாதம் இந்தியாவிடம் அளிக்க இருப்பதாகத் தெரிகிறது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமானோர் கறுப்புப்பணம் போட்டு வைத்துள்ளதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. அத்தகைய இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தானாக பகிர்ந்துகொள்வது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, முதன்முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து அளித்தது. இரண்டாவது தடவையாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொண்டது.

இந்த நிலையில், மூன்றாவது தடவையாக இம்மாதம் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து அளிக்கிறது. தகவல் பகிர்வுக்கான சர்வதேச கூட்டமைப்பின் சிபாரிசின்பேரில், முதன்முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விவரங்களும் இந்த தகவல்களில் இடம்பெறுகிறது.

இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் சுவிட்சர்லாந்தில் வாங்கிக்குவித்த அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிலங்கள் ஆகியவையும், அவற்றின் மூலம் ஈட்டிய வருமான விவரங்களும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 14 செப் 2021