மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

அமெரிக்காவில் கிரீன்கார்டு பெற புதிய சட்டம்!

அமெரிக்காவில் கிரீன்கார்டு பெற புதிய சட்டம்!

இந்தியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பலர் குடியேறுகின்றனர். குறிப்பாக, அதில் இந்திய மக்களின் வருகை அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற கிரீன் கார்டு கட்டாயம் என்பதால் இதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கிரீன் கார்டு இந்தியர்களால் பல்வேறு காரணங்களால் எளிதில் பெற முடிவதில்லை.

இதனால், இந்தியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நியூயார்க் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் சிரஸ் டி மேத்தா, “அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் செய்ய இந்தியர்களுக்காக புதிய சட்ட மசோதா விரைவில் இயற்றப்பட இருக்கிறது. அதில் முக்கிய அம்சமாக, கிரீன் கார்டு பெறுவதில் நிலுவையில் உள்ள இந்திய விண்ணப்பத்தாரர்கள் ரூ.3.80 லட்சம் கூடுதலாகச் செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக்கொள்ள முடியும்.

எச்1பி விசா வைத்திருப்பவர்களும் தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அல்லது முடிந்து இருந்தாலும் இந்த புதிய மசோதாவின் கீழ் கூடுதலாகப் பணம் செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இது ஒரு அருமையான மசோதாவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

செவ்வாய் 14 செப் 2021