மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

ஆரணியில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

ஆரணியில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள உணவகங்களில் கடந்த நான்கு நாட்களாக நடத்திய ஆய்வுகளில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணியில் உள்ள 7 ஸ்டார் என்ற அசைவ உணவகத்தில் சிக்கனும், பிரியாணியும் சாப்பிட்ட லோஷினி என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து 7 ஸ்டார் உணவகத்தில் ஆய்வு நடத்தியதில் கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்டதால்தான் சிறுமி உயிரிழந்தார் என்பது உறுதியானது.

இதையடுத்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கடை உரிமையாளரான காதர் பாஷா மற்றும் சமையலர் முனியாண்டி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்ததிலிருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நடத்திய ஆய்வில், 5 ஸ்டார் என்ற ஹோட்டலில் மீன், நண்டு உள்ளிட்ட 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அங்கேயே அழித்தனர். 5 ஸ்டார் ஹோட்டலின் உரிமையாளர் சாதிக் பாஷா மீது அழுகிய இறைச்சியை பதுக்கி வைத்திருந்ததோடு, தரமற்ற உணவு விநியோகித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மொத்தமாக 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போன இறைச்சியை வியாபாரத்திற்கு தயாராக வைத்திருந்த 18 ஹோட்டலின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உணவகங்களில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரணியைத் தொடர்ந்து ஈரோட்டில், காந்திஜி சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 14 செப் 2021