மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாட்டி செப்டம்பர் 17ஆம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 14) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசு சார்பாக மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டதில்லை. முதன் முறையாக தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மாதிரிகளை பெங்களூருவுக்கு அனுப்பி, அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ரூபாய் 5,000 செலவானது. இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தற்போது நலமாக உள்ளார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடத்தப்படும். அதன்பின்பு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தமிழ்நாட்டில் மீண்டும் வருகிற 17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இருதினங்களில் ஒன்றிய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் வரும்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மற்ற கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

அதுபோன்று, தமிழ்நாட்டிற்கு மருத்துவ கட்டுமானங்களை பார்வையிட வந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், இங்கு உள்ள கட்டுமானங்களையும், திட்டங்களையும் பார்த்து வியந்து பாராட்டினார்.

ஒரே நாளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை செய்துள்ளீர்கள். 20 லட்சம் டார்கெட் வைத்து 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது எல்லாம் இமாலய சாதனை என்று பாராட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசியை வீணடிக்காமல் கூடுதலாக போட்டது எப்படி?, மெகா தடுப்பூசி முகாம் நடத்தியது எப்படி? கொரோனா கட்டுப்பாடுகள் திட்டம் என்ன? போன்ற விஷயங்களை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

-வினிதா

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

செவ்வாய் 14 செப் 2021