மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: பிரெட் ஆனியன் பொடிமாஸ்!

ரிலாக்ஸ் டைம்: பிரெட் ஆனியன் பொடிமாஸ்!

ரிலாக்ஸ் டைமில் அதிகம் மெனக்கெடாமல், அதே நேரம் வாய்க்கு ருசியாக என்ன சமைக்கலாம் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த பிரெட் ஆனியன் பொடிமாஸ்.

எப்படிச் செய்வது?

பத்து பிரெட் ஸ்லைஸ்களை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். மூன்று பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு அரை டீஸ்பூன், உளுந்து அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் இரண்டு வெங்காயத்தை நீளமாக நறுக்கிய சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு கீறிய பச்சை மிளகாய், துண்டுகளாக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன் சேர்த்து சிறிது வதக்கி கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவுஉப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

உடனடி புத்துணர்ச்சி தரும் இந்த பிரெட் ஆனியன் பொடிமாஸ், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளின் உடல் எடையை கூட்டும்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 14 செப் 2021