மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: அதிரசம்

கிச்சன் கீர்த்தனா: அதிரசம்

கன்யா மாதமான புரட்டாசி பெருமாளுக்குரிய மாதமாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்குரிய நைவேத்தியங்களில் அதிரசம் விசேஷமானது. ஸ்ரீனிவாசப்பெருமாள் - பத்மாவதி திருமணத்தில் வகுளாதேவி அன்னையே இந்த அதிரசத்தைச் செய்து சமர்ப்பித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. தமிழர்களின் தொன்மையான பலகாரமான இந்த அதிரசம் இல்லாத பண்டிகைகள், விசேஷங்கள் ஏது?

என்ன தேவை?

பச்சரிசி மாவு - 500 கிராம்

வெல்லம் - 500 கிராம்

எண்ணெய் - ஒரு கிலோ

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, சுத்தப்படுத்தவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிப் பாகு காய்ச்சவும். கனமான கம்பிப் பதம் வந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும். சலித்த அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாகில் கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும். கிளறும்போதே ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டி சப்பாத்தி மாவு போல பிசைந்து வெள்ளைத் துணி போட்டு பாத்திரத்தை மூடிவைக்கவும். ஒருநாள் கழித்து அந்த மாவை எடுத்து உருட்டி, வாழையிலையில் வைத்து வட்டமாக தட்டவும். தட்டிய அதிரசத்தை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுக்கவும். வெல்லத்துக்குப் பதிலாக சர்க்கரை சேர்த்தும் அதிரசம் செய்யலாம். அது, சற்றுக் கெட்டியாக இருக்கும்.

நேற்றைய ரெசிப்பி: அவல் சர்க்கரைப் பொங்கல்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 14 செப் 2021