மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

பள்ளியில் ஆசிட் பாட்டில் உடைந்து மாணவிகள் காயம்!

பள்ளியில் ஆசிட் பாட்டில் உடைந்து மாணவிகள் காயம்!

விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகத்தில் உள்ள கந்தக அமிலம் கொட்டியதில் 4 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் என்ற பகுதியில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அமைந்துள்ள பகுதியில் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதற்காக பள்ளியின் ஆய்வகம் இடிக்கப்பட்டு வருகின்றது. அதனால், ஆய்வகத்தில் உள்ள பொருட்களை அகற்றுமாறு பள்ளிக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தியிருந்தது. கடந்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் ஆய்வகத்தில் உள்ள பொருட்களை அகற்றாமல் இருந்துள்ளனர்.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, மாணவிகள் இடிபாடுகளில் இருந்த ஆய்வக பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கான்கிரீட் துண்டு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசிட் மீது பட்டு ஆசிட் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்கள் உடைந்தது. ஆசிட் பாட்டில்கள் உடைந்து பாமா (17), ஜனனி (16), ஆதிஷா (16), நித்யா (17) ஆகிய நான்கு மாணவிகள்மீது கந்தக அமிலம் பட்டுள்ளது. இதில் மாணவியின் முகம் மற்றும் கண் பகுதியில் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளிடம் நலம் விசாரித்தார்.

மாணவர்களை வைத்து ஆய்வகப் பொருட்களை அப்புறப்படுத்தியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 13 செப் 2021