மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: பாம்பே சாண்ட்விச்!

ரிலாக்ஸ் டைம்: பாம்பே சாண்ட்விச்!

எட்டாம் வகுப்புக்குட்பட்ட குழந்தைகள் இன்னும் ஆன்லைன் கிளாஸுடன் வீட்டிலேயே வலம்வரும் நிலையில் ரிலாக்ஸ் டைமில் இந்த சாண்ட்விச் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உடனடி புத்துணர்ச்சி பெறுவார்கள்.

எப்படிச் செய்வது?

நான்கு பச்சை மிளகாய், இஞ்சி ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்), புதினா, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னி தயார்.

ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு பீட்ரூட்டையும் இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு இரண்டையும் தோலுரித்து ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வெள்ளரிக்காய், ஒரு தக்காளியை ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வெங்காயத்தைத் தோலுரித்து சிறிய வட்டங்களாக நறுக்கவும்.

ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவவும். மற்றொரு பிரெட் ஸ்லைஸில் கிரீன் சட்னி தடவவும். கிரீன் சட்னி தடவிய பிரெட் ஸ்லைஸை ஒரு தட்டில் வைத்து கிரீன் சட்னியின் மேல் இரண்டு உருளைக்கிழங்கு துண்டுகள், இரண்டு பீட்ரூட் துண்டுகள் வைக்கவும். இதன் மேல் சில தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.

காய்கறிகளின் மேல் சிறிதளவு டொமேட்டோ கெட்சப் தெளித்து, சாட் மசாலாத்தூள் தூவி, வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸால் மூடவும். மற்ற பிரெட் ஸ்லைஸ்களிலும் இதேபோல் சாண்ட்விச் செய்துகொள்ளவும். ஒவ்வொரு சாண்ட்விச்சையும் நான்கு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 13 செப் 2021