மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

நீட் தேர்வு எப்படி இருந்தது?

நீட் தேர்வு எப்படி இருந்தது?

நீட் தேர்வில் இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. 3 ஆயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு கேள்விகள் எப்படி இருந்தது? தேர்வு மையங்களில் கெடுபிடிகள் இருந்ததா என்பது குறித்து மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், "கேள்வித்தாள் எளிமையாகத் தான் இருந்தது. ஆனால் இயற்பியல் பாடம் சற்று கடினமாக இருந்தது. வேதியியல் பாடக் கேள்விகள் கடினமாகவும் இல்லை எளிமையாகவும் இல்லை. பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் , பதற்றம் இல்லாமல் இருந்தது" என்று கூறினர்.

மாணவி ஒருவர் கூறுகையில், “இயற்பியல், வேதியியல் பாடக் கேள்விகள் கொஞ்சம் ட்விஸ்டாக இருந்தது. கணக்குகளைப் போட்டுத் தீர்வு காண்பதற்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்பு சோதனை செய்தார்கள். ஆனால் இதுபோன்று சோதனைகள் செய்வார்கள் என்று மனதளவில் தயாராகத் தான் சென்றேன். அதனால் இது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், “இரண்டாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுதினேன். கடந்த ஆண்டு தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. இந்த முறை நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று வீட்டிலிருந்து ஆறு மாதம் படித்தேன். ஒரு மாதம் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். கஷ்டப்பட்டதற்குப் பலனாகத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தேர்வு மையங்களில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு இருந்தன” என்றார்.

அதுபோன்று சில மாணவர்கள் இந்த ஆண்டு நேரடியாகப் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இணையத்தில் பயிற்சி மேற்கொண்டதால் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும் இயற்பியல் பாடத்தில் 45 வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

நேற்று மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

-பிரியா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 13 செப் 2021