மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: அவல் சர்க்கரைப் பொங்கல்

கிச்சன் கீர்த்தனா: அவல் சர்க்கரைப் பொங்கல்

புரட்டாசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மற்றும் நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கும் பலர் தங்கள் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பதுண்டு. அப்படிப்பட்ட விசேஷ நாள்களுக்கான சத்தான ரெசிப்பிகளில் இந்த அவல் சர்க்கரைப் பொங்கல் மிக முக்கியமானது; ஆரோக்கியமானது.

என்ன தேவை?

அவல் - ஒரு கப்

பாசிப்பருப்பு - கால் கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

ஏலக்காய் - 2 (பொடிக்கவும்)

முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் உடைத்த அவல், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: கொரோனாவுக்குப் பின் என்ன சாப்பிடலாம்?

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 13 செப் 2021