மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனைக்கு வராதது ஏன்?

ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனைக்கு வராதது ஏன்?

ஜியோ-கூகுள் கூட்டணியில் விலைகுறைந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 10) விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வராததன் காரணம் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை விநாயகர் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தொடங்கவில்லை. தற்போது கூகுள் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல்களை சோதனை செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் செமிகண்டக்டர்கள் தட்டுப்பாடு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தீபாவளி நேரத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் ஹெச்.டி. பிளஸ் 1440 x 720 பிக்சல் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, 13 எம்பி ஆம்னிவிஷன் ரியர் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

ஞாயிறு 12 செப் 2021