மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

விமானத்தில் மாநில மொழிகளில் அறிவிப்பு குறித்து நாளை முடிவு!

விமானத்தில் மாநில மொழிகளில் அறிவிப்பு குறித்து நாளை முடிவு!

விமானங்களில் அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க வேண்டும் என்றும் உள்நாட்டில் விமானம் புறப்படும் நேரம், சென்றடையும் நேரத்தை மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிய வழக்கு நாளை (செப்டம்பர் 13) விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞா் பி.ராம்குமார் ஆதித்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது; ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சு திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக்கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீா் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யேக ஆடைகள் இருக்கும் இடம், அவற்றைஅணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் அறிவிப்பு மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்படும்.

ஆனால், தற்போது அறிவிக்கப்படும், வழங்கப்படும் அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவிகித மக்கள் ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவா்கள். அவசர காலத்துக்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும்.

இந்திய ரயில்வேயில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநிலத்தின் உள்ளூா் மொழியில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. எனவே உள்நாட்டு விமானங்களில் விமானம் புறப்படும், விமானம் சென்றடையும் நேரத்தை மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன்பு நாளை (செப்டம்பர் 13) விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இதற்கான முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

ஞாயிறு 12 செப் 2021