மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு!

ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு!

கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.

நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. தென்னந்தோப்புகளில் 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதில் கோடைக்காலத்தில் அதிகம் வரத்து இருக்கும் என்பதால் தேங்காய்க்கு விலை அதிக விலை கிடைக்காது. அதுபோன்று விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் தேங்காய் வரத்து குறைவாக இருக்கும்.

எனவே தென்னை சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் அவற்றுக்குள் ஊடுபயிராக மஞ்சளை சாகுபடி செய்வதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். தற்போது பி.ஏ.பி திட்டத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் ஊடுபயிராக மஞ்சள், கோகோ, ஜாதிக்காய், வாழை மற்றும் பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “தென்னை நீண்டகாலம் பலன் தரும் பயிர். இதனுள் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காது. இதன் காரணமாக காய்கறி பயிர் சாகுபடி செய்வதில் சவாலாக இருக்கிறது. இருந்தபோதிலும் வெண்டை, தக்காளி, மிளகாய், கத்திரி ஆகிய காய்கறிகளை சாகுபடி செய்துள்ளோம்.

நிழலில் செடிகள் உயரமாக வளரும். ஆனால் அதில் காய்ப்பு திறன் மிகவும் குறைவாகதான் இருக்கும். இருந்தபோதிலும் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்து வருகிறோம். சில இடங்களில் மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்துள்ளோம். இதனால் நல்ல பலன் கிடைக்கிறது” என்றனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

ஞாயிறு 12 செப் 2021