மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

மெகா தடுப்பூசி முகாம்: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்தது!

மெகா தடுப்பூசி முகாம்: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்தது!

இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக நேற்று அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் போலியோ சொட்டு மருந்து போடும் இடங்கள் எனப் பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயக கடமையைப் போன்று இன்று காலை முதலே பல்வேறு இடங்களிலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக முகாம்களில் திரண்டனர்.

அதன்படி இன்று 20 இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போடவேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "தற்போதைய நிலவரப்படி 23.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே இன்று நல்ல வரவேற்பு இருந்தது. சென்னை, கோவை , திருப்பூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரே நாளில் தலா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் போது, அதன் மீதான அச்சம் மற்றும் வெறுப்பு காரணமாக அந்த மாதம் ஒரு லட்சம் பேருக்குத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பிப்ரவரி மாதம் 3.52 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது. இது மார்ச் மாதம் 23.73 லட்சமாக அதிகரித்தது. ஏப்ரல் மாதம் 28 லட்சமாகவும், மே மாதத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமாகவும், ஜூன் மாதத்தில் 57 லட்சமாகவும், ஜூலை மாதத்தில் 67 லட்சமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 92 லட்சமாகவும் அதிகரித்தது.

ஆனால் செப்டம்பர் மாதத்தில் இந்த 12 ஆம் தேதிக்குள் 70 லட்சத்துக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் 4 கோடி டோஸ் எண்ணிக்கையை எட்டி விடலாம்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று நல்ல வரவேற்பு இருந்தது என்று தெரிவித்தார்.

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து பேசிய செயலாளர் ராதாகிருஷ்ணன், 29 லட்சம் தடுப்பூசி தான் கையில் இருந்தது” என்று பதிலளித்தார்.

-பிரியா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 12 செப் 2021