மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

காவலர்களுக்கு ஆணையர் சங்கர் ஜிவால் விடுக்கும் அறிவுரை!

காவலர்களுக்கு ஆணையர் சங்கர் ஜிவால் விடுக்கும் அறிவுரை!

காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தற்கொலை சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வேலுச்சாமி என்ற காவலர் ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். அதன்மூலம் ஏழு லட்சம் வரை பணத்தை இழந்ததால், கடன் தொல்லை ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். நூலிழையில் உயிர் தப்பிய அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் திருத்தப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற வேண்டும். அதுவும் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவலர்களின் இந்த செயலால் அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். காவலர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய காவலர்கள் இப்படி நடந்தால் காவல்துறை நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால் காவலர்கள் பணியின்போதோ, ஓய்வின்போதோ ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 11 செப் 2021