மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

திருமணத்தில் நடனம் ஆடுவதில் மோதல் : மூவருக்கு கத்திக்குத்து!

திருமணத்தில் நடனம் ஆடுவதில் மோதல் : மூவருக்கு கத்திக்குத்து!

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதில் இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை அப்பலோ மருத்துவமனை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணமகன் தினகரன் என்பவருக்கும் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மணமகள் மஞ்சுளா என்பவருக்கும் நேற்றிரவு(செப்டம்பர் 10) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள் டிஜே பாடலுக்கு சந்தோஷமாக நடனம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது, நடனம் ஆடுவதில் மணமகளின் அண்ணன் வினோத் என்பவரின் நண்பர்களுக்கும், மணமகனின் நண்பர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மணமகளின் தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகனின் நண்பர்களான தினேஷ், யுவராஜ், ஹேமந்த ஆகிய மூன்று பேரையும் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து வெட்டுக்காயம் ஏற்பட்ட மூவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்பு, மூவரை கத்தியால் தாக்கிய ஆகாஷ், ஜான், தோத்து என்கிற வினோத், லொட்ட வசந்த், அப்துல் கரீம் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தரப்பினரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து சம்பவம் நடந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோயிலில் திருமணத்தில் யார் முதலில் தாலி காட்டிக்கொள்வது என்பதில் இருவீட்டாரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 11 செப் 2021