மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

அதிகரிக்கும் கொரோனா : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு!

அதிகரிக்கும் கொரோனா : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு!

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று(செப்டம்பர் 10) ஒரே நாளில் 1631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,58,197 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 1,523 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 16,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கோவையில் 235 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், திருப்பூரில் 113 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, கோவையில் 5 பேரும், சென்னையில் 2 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், மயிலாடுதுறையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று(செப்டம்பர் 10) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1500 லிருந்து 1600 ஆக இருந்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்குவது கவலை அளிக்கிறது. கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டதால் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து கண்காணிப்பதுடன், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 12) 10,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிபடுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 11 செப் 2021