மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் கொழுக்கட்டை

முதன்மைக் கடவுளாகப் போற்றப்படுகிற விநாயகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியில் முதலிடம் பெறுவது மோதகமும் கொழுக்கட்டையும்தானே. ஆவியில் வேகப்படுவதால் அனைத்து வயதினருக்கும் உகந்த சுவை உணவாக வரவேற்கப்படும் கொழுக்கட்டையை சத்தான உணவாகவும் செய்து அசத்தலாம். அதற்கு சிறந்த உதாரணம், இந்த டிரை ஃப்ரூட் கொழுக்கட்டை.

என்ன தேவை?

சர்க்கரை இல்லாத கோவா - அரை கப்

பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - கால் கப்

ஏலப்பொடி - அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய முந்திரி / பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கோவாவை துருவி, கனமான கடாயில் போட்டு, சர்க்கரை, பால் பவுடர் கலந்து, நன்றாகக் கெட்டியாகும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பிறகு, அதில் ஏலப்பொடி சேர்த்து ஆற வைக்கவும். கொழுக்கட்டை அச்சை எடுத்து அதில் சிறிது நட்ஸைத் தூவவும். பிறகு, கோவாவை கொழுக்கட்டை அச்சில் அடைத்து, நடுவிலும் பொடியாக நறுக்கிய நட்ஸை சிறிது வைத்து கொழுக்கட்டை செய்யவும்.

நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பட்டாணி கொழுக்கட்டை

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 11 செப் 2021