மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: ரவை ஸ்வீட் கொழுக்கட்டை!

ரிலாக்ஸ் டைம்: ரவை ஸ்வீட் கொழுக்கட்டை!

இன்றைய தினம் முழு முதற்கடவுளான விநாயகருக்குப் பிடித்த சுண்டல், கொழுக்கட்டை, மோதகம் முதலிவற்றை நைவேத்தியமாகச் செய்து படைப்போம். அந்த வகையில் இந்த வருட சதுர்த்திக்கு விநாயகருக்குப் படைத்ததுபோக, ரிலாக்ஸ் டைமில் சாப்பிட எளிதாகச் செய்யக்கூடிய இந்த ரவை ஸ்வீட் கொழுக்கட்டையை செய்து ருசிக்கலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் ரவையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையுடன் முக்கால் கப் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, இறக்கி ரவை பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி வேகவிடவும். அது வேகும் வரை அப்படியே மூடிவைக்கவும். சர்க்கரை கரைந்து ரவையுடன் சேர்ந்து ரவை கால் பாகம் வெந்திருக்கும். இத்துடன் அரை கப் துருவிய தேங்காய், கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். ஆறியவுடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 10 செப் 2021