மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 1.29 லட்சம் பேர் பயணம்!

தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 1.29 லட்சம் பேர் பயணம்!

விநாயகர் சதுர்த்தி உள்பட மூன்று நாள் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 1.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகிறது. அதனால், முன்புபோல் பண்டிகைகளுக்கு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு லட்சக் கணக்கில் மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி, அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி நாட்கள் என மொத்தம் மூன்றுநாள்கள் விடுமுறை என்பதால் நேற்று ஏராளமானோர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 2,642 சிறப்பு பேருந்துகள் மூலம் 1.29 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இது பேருந்துகளில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே. பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் இருசக்கரவாகனங்களில் ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதுபோன்று ரயில்களில் எத்தனை பேர் பயணித்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வெள்ளி 10 செப் 2021