மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

வீட்டில் பட்டாசு தயாரிப்பு: வெடி விபத்தில் ஒருவர் பலி!

வீட்டில் பட்டாசு தயாரிப்பு: வெடி விபத்தில் ஒருவர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பட்டாசு தொழிலை முக்கிய தொழிலாக கொண்டுள்ள விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் வெடி விபத்து ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி என்ற கிராமத்தில் எஸ்பிஎம் தெருவில் பாலமுருகன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

இன்று(செப்டம்பர் 10) காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீடு இடிந்து தரைமட்டமாகியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். வெடி விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சண்முகராஜ் (52) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 10 செப் 2021