மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பட்டாணி கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா:  பச்சைப்பட்டாணி கொழுக்கட்டை

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கலந்து கூடவே கொழுக்கட்டையும் செய்து விநாயகருக்குப் படைக்கும் நீங்கள், இந்த வருடம் வித்தியாசமான, சுவையான, சத்தான இந்த பச்சைப்பட்டாணி கொழுக்கட்டை செய்து பிள்ளையாரை மட்டுமல்ல; உங்கள் பிள்ளைகளையும் அசர வைக்கலாம்.

என்ன தேவை?

மேல் மாவுக்கு...

மைதா - ஒரு கப்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

வெந்நீர் - தேவைக்கேற்ப

ஃபில்லிங் செய்வதற்கு...

வேகவைத்த பச்சைப்பட்டாணி - ஒரு கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று

சீரகம் - அரை டீஸ்பூன்

தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்

எண்ணெய்- 3 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

மைதா மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதில் சூடான நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகப் பிசையவும். பிறகு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, மூடி அதை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். (மல்லி) தனியாவை இடித்துக்கொள்ளவும். மீண்டும் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த பட்டாணி, இடித்த தனியா இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து உதிரியாக வரும்வரை வதக்கிக் கொள்ளவும். மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய பூரிகளாகச் செய்து கொள்ளவும். எவ்வளவு மெல்லியதாகச் செய்ய முடியுமோ அவ்வளவு மெல்லியதாக. ஒரு பூரியை எடுத்து அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் ஃபில்லிங் வைத்து அதை மூடி விருப்ப மான வடிவில் கொழுக்கட்டையாகச் செய்யவும். இந்தக் கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: ரோஸ் குல்கந்து கொழுக்கட்டை

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 10 செப் 2021