மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

20 வருடங்களுக்குப் பிறகு மின் இணைப்பு: மகிழ்ச்சியில் பழங்குடியினர்!

20 வருடங்களுக்குப் பிறகு மின் இணைப்பு: மகிழ்ச்சியில் பழங்குடியினர்!

மின்சார இணைப்பு வழங்காததால் 20 ஆண்டுகளாக சிரமப்பட்ட பழங்குடியினர் குடியிருப்புக்கு அமைச்சர் உத்தரவால் வெளிச்சம் கிடைத்த சம்பவம் அம்மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் அருகே காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் 34 குடிசைகளில் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் மின்வாரியத்தில் விண்ணப்பித்தும் பல்வேறு காரணங்களைக் கூறி மின் இணைப்பு தரப்படாததால், இவர்கள் 20 ஆண்டுகளாக இருளில் சிரமப்பட்டு வந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை அலுவலகத்தில் முறையிட்டனர். சென்னையில் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த அமைச்சர், அலுவலகப் பணியாளர்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து மதுரை கலெக்டர் அனீஷ் சேகரின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையை அமைச்சர் தெரிவித்தவுடன் விரைந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காட்டு நாயக்கர் சமூக மக்கள், “நீண்டகாலமா இங்கே குடியிருந்து வர்றோம். சில வீடுகளுக்கு வீட்டு வரி ரசீதும் பெற்றுள்ளோம். அப்படியிருந்தும் எங்களுக்கு கரன்ட் இணைப்பு தராமல் இழுத்தடித்தார்கள். அதனால எங்க பிள்ளைங்க தெரு லைட்டு வெளிச்சத்தில்தான் படிச்சிட்டு வர்றாங்க.

கரன்ட் இல்லாமல் அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தனர். கரன்ட் இப்போ கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மற்ற அடிப்படை வசதிகளும் செஞ்சு கொடுப்பதா சொல்லியிருக்காங்க” என்றனர்.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வியாழன் 9 செப் 2021