மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

தண்ணீர் லாரியும் வேனும் மோதியதில் 4 பெண்கள் உயிரிழப்பு!

தண்ணீர் லாரியும் வேனும் மோதியதில் 4 பெண்கள் உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே தண்ணீர் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆரணி அருகே காரும் லாரியும் மோதியதில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். ஆகஸ்ட் 30ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா பகுதியில் நடந்த கார் விபத்தில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 4ஆம் தேதி பெருங்களத்தூர் அருகே நடந்த விபத்தில் இண்டர்வியூக்காக சென்னை வந்த 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை வாகனங்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம்.

வழக்கம்போல் இன்று(செப்டம்பர் 9) காலை ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் பகுதியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. வேன் சில்லாநத்தம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தண்ணீர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் வேனில் வந்த சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி, காமாச்சி, முப்புள்ளிபெட்டியைச் சேர்ந்த சந்தியா ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயும், நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மணிமேகலை மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இதில் படுகாயமடைந்த வேன் ஒட்டுனர் பாபு, லாரி ஒட்டுநர் பண்டாரம் உட்பட 10 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்றைய சட்டப்பேரவையில் விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 9 செப் 2021