மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: பழுப்பு அரிசி – மாதுளை மூஸ்!

ரிலாக்ஸ் டைம்: பழுப்பு அரிசி – மாதுளை மூஸ்!

‘இரண்டு டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்’ என்பதற்காக வாங்கிய கண்டன்ஸ்டு மில்க் டப்பா, பிறகு எடுப்பார் இன்றி ஃப்ரிட்ஜில் தூங்கும். அந்த நிலையில் அதன் கடைசி சொட்டுவரை வீணாக்காமல் விதம் விதமாக, வித்தியாசமான ரெசிப்பிகள் செய்யலாம். அதற்கு உதாரணம் இந்த பழுப்பு அரிசி – மாதுளை மூஸ்.

எப்படிச் செய்வது?

அரை கப் பழுப்பு அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரை கப் மாதுளம்பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிட்டு சாஸ் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து கால் கப் பால், அரை கப் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, மிதமான தீயில் வேகவிட்டு, கலவை கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் பழுப்பு அரிசி சாதம் - கண்டன்ஸ்டு மில்க் கலவை, மாதுளம்பழ சாஸ், அரை கப் பால் பவுடர் சேர்த்து மிருதுவாக அரைத்தெடுக்கவும். இதைச் சிறிய பவுல்கள் அல்லது கண்ணாடி டம்ளர்களில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். மாதுளை முத்துகள் கொண்டு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

சிறப்பு

பழுப்பு அரிசியில் வைட்டமின் சி தவிர, அனைத்து வைட்டமின் சத்துகளும் அடங்கியுள்ளன. உடலிலிருக்கும் நல்ல கொழுப்பு செரிமானத்தை எளிதாக்கி, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 9 செப் 2021