மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

கோயில் இடத்தில் உள்ள சாலையை அகற்ற உத்தரவு!

கோயில் இடத்தில் உள்ள சாலையை அகற்ற உத்தரவு!

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட சாலையை 30 நாட்களுக்குள் அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள பூலாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம். இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து, கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஓய்வுபெற்றார். இவர் 12 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். ஓய்வுக்கு பின்னர் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் கிராமத்தில் உருமன் சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 225 அடி தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெறவில்லை. இந்தச் சாலையை அகற்ற அறநிலையத்துறை உத்தரவிட்டும் சாலை அகற்றப்படவில்லை. எனவே, கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட தார் சாலையை அகற்றவும், கோயில் நிலத்தை யாரும் பயன்படுத்தாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று(செப்டம்பர் 8) நீதிபதி செந்தில்குமார் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.காந்தி, சாலை அமைக்கப்பட்டுள்ள இடம் வருவாய் ஆவணங்களில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றுள்ளது என்று கூறினார்.

இதையடுத்து பேசிய நீதிபதி, உருமன் கோயில் இடத்தில் உள்ள சாலை அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். அதனால் கோயில் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையை 30 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 9 செப் 2021