மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள்!

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள்!

விநாயகர் சதுர்த்தியோடு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் இருக்கும் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி வருகிற 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), அதைத் தொடர்ந்து 11ஆம் தேதி (இரண்டாவது சனிக்கிழமை), 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறை வருகிறது. அத்துடன் இன்றும் நாளையும் (செப்டம்பர் 9) முகூர்த்த நாளாகவும் இருக்கிறது. அதனால் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவு நடைபெறும். இதன் காரணமாக பொது மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளவார்கள்.

இதனால் நாளை (செப்டம்பர் 9) வியாழக்கிழமை மாலை முதல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், “விநாயகர் சதுர்த்தியோடு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிடுவார்கள். எனவே, பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பேருந்துகளோடு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,000 சிறப்பு பேருந்துகளைக் கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளோம்.

நேற்று 100 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இன்று (செப்டம்பர் 8) 300 பேருந்துகளும், 9ஆம் தேதி 600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் தேவையைப் பொறுத்து கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக இருக்கிறோம்.

அதேபோல விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்குத் திரும்பி வர வசதியாகவும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 8 செப் 2021