மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

வைப்புத்தொகை வட்டி: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

வைப்புத்தொகை வட்டி:  ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு, வட்டி சதவிகிதத்தை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா ஊரடங்குக்கு முன் மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கு வங்கிகள் 8.5 முதல் 9 சதவிகிதம் வட்டி வழங்கின. கொரோனா ஊரடங்குக்குப் பின் இந்த வட்டித்தொகை 7 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வட்டியைக் குறைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஊரடங்குக்கு முன்பு வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள், இந்த வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் மாத வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மூத்த குடிமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரம், மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒன்றிய அரசின் கொள்கை முடிவாகும். எனவே இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க முடியாது.

அதேசமயம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வட்டி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 8 செப் 2021