மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்: கடுமை காட்டிய காவல் துறை!

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்: கடுமை காட்டிய காவல் துறை!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் அடையாள அட்டை கேட்டு குவிந்த மாற்றுத்திறனாளிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கடுமையாக நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கத்தில், மருத்துவக் குழுவினர் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து கை கால் பாதிக்கப்பட்டோர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதோர், கண் பார்வை குறையுடையோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப மனுக்களுடன் அரங்கத்துக்கு முன்பு காலையிலேயே குவியத் தொடங்கினர். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்படாததால் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் கடுமையான முறையில் நடந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வந்தவர்கள் ஒருவரோடு ஒருவராக முண்டியத்துக்கொண்டு அரங்கத்துக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, போலீஸார் மாற்றுத்திறனாளிகளை உள்ளே அனுமதிக்காமல் வெளியில் தள்ளினர். அரங்கத்துக்கு முன்பு கயிறு கட்டி மாற்றுத்திறனாளிகளைத் தடுத்து நிறுத்தியதுடன் கம்புகளாலும், கைகளாலும் தடுத்தனர்.

இதனால், விண்ணப்பங்களுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பரபரப்புக்கு இடையே மாற்றுத்திறனாளிகளைத் தரையில் அமர்த்தி ஒவ்வொருவராக கயிற்றுக்குள் இழுத்து அரங்கத்துக்குள் உள்ளே அனுப்பிய காவல் துறையினரின் செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுடன் வந்திருந்தவர்கள் கடுமையாகக் கண்டித்து வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முகாம் நடைபெறும் பகுதிக்கு விரைந்து வந்து காவல் துறையினரை கனிவுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தி மாற்றுத்திறனாளிகளை அமைதி காக்கச் செய்தார்.

பின்னர், முகாம் ரத்து செய்யப்பட்டு மாற்றுத்தினாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரே இடத்தில் முகாம் நடப்பதை தவிர்த்து ஒன்றியங்கள் தோறும் மருத்துவக் குழுவினரை அனுப்பி பரிசோதனை அடிப்படையில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்ததையடுத்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்துச் சென்றனர்.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 8 செப் 2021