மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

மத உரிமையை விட வாழ்வாதார உரிமை முக்கியம்!

மத உரிமையை விட வாழ்வாதார உரிமை முக்கியம்!

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழ்நாடு அரசு கடந்த 30ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(செப்டம்பர் 8) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல குறைந்தபட்சம் ஐந்து பேராவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது, மத உரிமைகளை விட வாழ்வாதார உரிமை முக்கியமானது. பொதுநலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது உயிர்தான் முக்கியம். அதனால், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

புதன் 8 செப் 2021