மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: பனீர் பாயசம்!

ரிலாக்ஸ் டைம்: பனீர் பாயசம்!

பனீரில் என்ன வேண்டுமானாலும் சமைக்கலாம்... சொன்னபடியெல்லாம் கேட்கும். அந்த வகையில் டிக்கா, பிரியாணி, புர்ஜி என வழக்கமான அயிட்டங்கள் தவிர்த்து இன்று எளிமையாகச் செய்ய கூடிய பனீர் பாயசம் செய்து அசத்துங்கள்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காமல் அரை லிட்டர் கெட்டியான பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கப் துருவிய பனீர் சேர்க்கவும். இரண்டு ஏலக்காயை இடித்துச் சேர்க்கவும், ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கிளறி இறக்கவும். சர்க்கரை, பால், பனீர், ஏலக்காய் ஆகிய அனைத்தும் சேர்ந்து நல்ல மணம் தரும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து காய்ந்ததும் நான்கு முந்திரி, நான்கு பாதாமை நன்றாக வறுத்து, செய்துவைத்திருக்கும் பாயசத்துடன் சேர்க்கவும்.

சிறப்பு

சைவ உணவுக்காரர்களுக்கு புரதத் தேவையை நிறைவேற்றுவதில் பனீருக்கு முக்கிய இடமுண்டு. குழந்தைகளின் ஃபேவரைட் என்பதால் பனீர் சமையல் எப்போதும் சந்தோஷமும் புத்துணர்ச்சியும் தரும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 8 செப் 2021