மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

மூன்றாவது அலை ஏற்கனவே வந்துவிட்டது: மேயர்!

மூன்றாவது அலை ஏற்கனவே வந்துவிட்டது: மேயர்!

மும்பையில் ஏற்கனவே மூன்றாம் அலை வந்துவிட்டது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்தது. தற்போதும் தினசரி பாதிப்பில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஆனால், தினசரி பாதிப்பு அறுபதாயிரத்திலிருந்து தற்போது நான்காயிரம், ஐந்தாயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,46,725 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15,998 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 7) செய்தியாளர்களைச் சந்தித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், “மும்பையில் கொரோனா மூன்றாம் அலை ஏற்கனவே வந்துவிட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக் கூடாது. அதுபோன்று நிறுவனங்களில் சுழற்சி முறையில் பத்து பேர் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். கொரோனா முதல் அலை பண்டிகை காலத்தில்தான் பரவத் தொடங்கியது. அதனால் பண்டிகை காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

அதுபோன்று நாக்பூரிலும் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அமைச்சர் நிதின் ராவத் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், "கொரோனா அதிகரித்து வருவதையடுத்து அரசியல் பேரணிகள் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. மக்களின் ஆரோக்கியம்தான் முக்கியம். பண்டிகை எப்போது வேண்டுமானாலும் கொண்டாடலாம். அதனால் மக்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதன்மூலம் மூன்றாவது அலையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் நிலைமை மேலும் மோசமாகக் கூடும்” என்று கூறியிருக்கிறார்.

-வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

புதன் 8 செப் 2021