மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி!

கலைக் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (செப்டம்பர் 7) வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குக் கூடுதலாக 25 சதவிகிதம் இடங்கள் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இருந்தும் நகராட்சியில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இம்மாணவர்கள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது சிரமம்.

மேலும், அரசுக் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் இந்தக் கல்வியாண்டில் கூடுதலாகத் தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளுக்கு 25% கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25% கூடுதலாகவும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை பரிசீலித்த அரசு, நடப்பு கல்வியாண்டில் கலை பாடப்பிரிவுகளுக்கு 25% கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25% கூடுதலாகவும் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 8 செப் 2021