மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: சாக்லேட் சந்தேஷ் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: சாக்லேட் சந்தேஷ் கொழுக்கட்டை

கொழுக்கட்டை... நம் பாரம்பரிய உணவுகளில் முக்கியமானது, ஆரோக்கியமானது. ஆனால், கொழுக்கட்டை என்ற பெயரில் செய்துகொடுத்தால் முகம் சுளிக்கும் குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் மோமோஸ் என்ற பெயரில் அதையே ஆரோக்கியமில்லாத மைதாவில் செய்து கொடுப்பதை கடைகளில் வாங்கி ஸ்டைலாக சாப்பிடுவார்கள். ஆரோக்கிய உணவுகள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டால் யாருக்குமே அவற்றுக்குப் பழகுவது சிரமமாகத்தான் தெரியும். சிறு வயதிலிருந்தே அதற்குப் பழக்க வேண்டும். அதற்கு இந்த சாக்லேட் சந்தேஷ் கொழுக்கட்டை பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

துருவிய பனீர் - 100 கிராம்

பொடித்த சர்க்கரை - கால் கப்

கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பனீரை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான ஒரு கடாயில் சர்க்கரை, கோகோ பவுடர், துருவிய பனீர் எல்லாவற்றையும் கலக்கவும். மிதமான தீயில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி ஆற விடவும். பிறகு, அதைக் கொழுக்கட்டை அச்சில் அடைத்து கொழுக்கட்டை செய்யவும். அச்சில் இல்லாமல் இதைக் கைகளாலும் செய்யலாம்.

குறிப்பு: விருப்பப்பட்டால் இதில் வால்நட், பாதாம் போன்ற நட்ஸையும் கலக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: பிஸ்கட் கொழுக்கட்டை

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 8 செப் 2021