மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

குழந்தை விற்பனை வழக்கு: காப்பக ஊழியருக்கு ஜாமீன்!

குழந்தை விற்பனை வழக்கு: காப்பக ஊழியருக்கு ஜாமீன்!

மதுரையில் சட்ட விரோதமாகக் குழந்தைகளை விற்பனை செய்த காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் இதயம் அறக்கட்டளை என்ற பெயரில் முதியோர் காப்பகம் 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்தக் காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்றுவிட்டு, குழந்தைகள் கொரோனாவால் உயிரிழந்ததாக போலி ஆவணங்கள் உருவாக்கி நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தை விற்பனை தொடர்பாக, காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உதவியாளர் மதர்ஷா உட்பட மொத்தம் ஒன்பது பேரை தல்லாக்குளம் போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள காப்பகங்களில் ஆய்வு நடத்தக் கோரி சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், குழந்தை விற்பனைக்கும் எனக்கும் தொடர்பில்லை. கைதாகி 67 நாட்களுக்கு மேலாகிறது. அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 6) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கலைவாணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த வழக்கில் காப்பகத்தில் இருந்து குழந்தையை வாங்கிய கணவன், மனைவி மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

செவ்வாய் 7 செப் 2021