மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

லாவகமாக பாம்பை வெளியேற்றிய பெண்: பாராட்டும் ஐஏஎஸ்!

லாவகமாக பாம்பை வெளியேற்றிய பெண்: பாராட்டும் ஐஏஎஸ்!

தன்னுடைய வீட்டிற்கு வந்த பாம்பை அடிக்காமல், குச்சியை வைத்து லாவகமாக பெண் ஒருவர் வெளியேற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு நுழைந்துவிட்டால், ஆணோ, பெண்ணோ முதலில் பெரிய கட்டையை எடுத்து அதை அடித்துவிட்டுதான் மறுவேலை செய்வார்கள். பின்பு, செத்த பாம்பை குழி தோண்டி பால் ஊற்றி புதைப்பார்கள். இதைதான் நாம் பார்த்திருப்போம். ’பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்று சொல்வார்கள். ஆனால் இங்கொரு பெண் பாம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாம்பை வெளியே அனுப்பியுள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளரும், இன்கோசர்வ் (INDCOSERVE) தலைமை செயல் இயக்குனருமான சுப்ரியா சாகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பெண் ஒருவர், "போடி தங்கம், நீ உன்னுடைய புத்துக்கு போ நான் வந்து அங்கே பாலும், முட்டையும் ஊத்துறேன். எங்களை பார்க்கதான் வந்தியா. நீ போ பா, போ, சத்தியமா வரேன், வந்து பால் ஊத்துறேன். இனிமே இங்க இருக்கிற யார் கண்ணுலேயும் நீ தட்டுப்படக் கூடாது. இங்க வரக் கூடாது”என்று அந்த பெண் சொல்வதற்கு இணங்கி செல்வதுபோல் பின்னோக்கியே சென்று கடைசியில் தான் வந்தவழியே அமைதியாக திரும்பி சென்றது அந்த பாம்பு. இந்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

இந்த வீடியோவை பதிவிட்ட ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு , "இந்த இரக்க குணம் கொண்ட பெண்மணி யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருடைய செயலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஒரு பாம்பை எப்படி திறமையாக பொறுமையாக கையாள வேண்டும் என்பதை இவரிடம் இருந்து அனைவரும் கற்று கொள்ள வேண்டும். உங்களை போன்று வன விலங்குகளின் உயிர்களை மதிக்கும் நிறைய பேர் நமது நாட்டிற்கு தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பை பார்த்து பயப்படாமலும், அதை அடிக்காமலும் வெளியே அனுப்பிய பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 7 செப் 2021