மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

சென்னை மாநகருக்குக் கூடுதல் குடிநீர்!

சென்னை மாநகருக்குக் கூடுதல் குடிநீர்!

சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் சென்னை மாநகர பகுதிகளுக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 2,621 மில்லியன் கன அடி (2.6 டிஎம்சி), சோழவரம் ஏரியில் 645 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2,880 மில்லியன் கன அடி (2.8 டிஎம்சி), செம்பரம்பாக்கம் ஏரியில் 2,652 மில்லியன் கன அடி (2.5 டிஎம்சி), கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் 477 மில்லியன் கன அடி மற்றும் வீராணம் ஏரியில் 1,392 மில்லியன் கன அடி உட்பட 10,667 மில்லியன் கன அடி (10.66 டிஎம்சி) இருப்பு உள்ளது.

சென்னை மாநகருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி. குடிநீர் தேவைப்படுகிறது. தற்போதைய இருப்புபடி அடுத்த 10 மாதங்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இதுதவிர வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் ஏரிகளின் நீர்ப்பிடிப்புகள் வாயிலாக ஏரிகளுக்கு கூடுதலாக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் தற்போது சென்னை மாநகருக்கு கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக நடப்பாண்டு தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த அளவு 933 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் குழாய்கள் மூலம் 735.91 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட மாநகர பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் 127.14 மில்லியன் லிட்டர், லாரிகள் மூலம் 18.51 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகளில் 12.92 மில்லியன் லிட்டர் உட்பட 894.48 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுதவிர தொழிற்சாலைகளுக்கு 16.11 மில்லியன் லிட்டரும், மொத்தமாக வாங்கும் நுகர்வோர்களுக்கு 23.15 மில்லியன் லிட்டர் உட்பட 933.74 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி (13.22 டிஎம்சி) ஆகும். ஆனால், தற்போது 10,667 மில்லியன் கன அடி (10.66 டிஎம்சி) அதாவது 80.68 சதவிகிதம் ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை முலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க ஏரிகளில் போதுமான இடவசதி இல்லை.

இதனால் சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக லாரிகளில் குடிநீர் வழங்குவதைச் சற்று குறைத்து கொண்டு குழாய்கள் மூலம் கூடுதலாக விநியோகிக்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது குடிநீர் விநியோகம் அதிகரிக்கப்பட்டு தட்டுப்பாடுகள் இல்லாமல் குடிநீர் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 7 செப் 2021