மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

நீலகிரியில் ட்ரோன் பயன்படுத்த முன் அனுமதி கட்டாயம்!

நீலகிரியில் ட்ரோன் பயன்படுத்த முன் அனுமதி கட்டாயம்!

கொடநாடு எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியின்றி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா இன்னசென்ட் எச்சரித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று, சயானிடம் போலீசார் மறு விசாரணை நடத்தி, ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட அமர்வு நீதிமன்றம் கூடுதல் விசாரணைக்காக 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.

இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் மீது தொடர்ந்து மூன்று நாட்களாக ட்ரோன் பறந்ததாக எஸ்டேட் மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ட்ரோன் பறக்க விட்டது யார்? என்ன நோக்கத்திற்காக பறக்க விடப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அரசு கேபிள் நிறுவனம் ட்ரோன் இயக்கியதாகக் கூறப்படுகிறது. அந்நிறுவன ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள மாவட்ட ஆட்சியர் திவ்யா இன்னசென்ட், “நீலகிரி மாவட்டத்தில் திருமணம், காதணி விழா, பெயர் சூட்டு, நீராட்டு விழா மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் சமீபகாலமாக புகைப்படங்கள் எடுப்பதற்காக அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளில்லா பறக்கும் கருவிகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய தருணங்களில் மட்டும் ட்ரோன் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும். விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இனிவரும் காலங்களில் ட்ரோன் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்” என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 7 செப் 2021