மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: மங்களூரு பன்!

ரிலாக்ஸ் டைம்: மங்களூரு பன்!

சமையலில் புதுசுபுதுசா, தினுசு தினுசா முயற்சி செய்து பார்ப்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படி அவர்கள் புதிதாக முயற்சி செய்யும் எல்லா ரெசிப்பியுமே சூப்பராக வரும் என உத்தரவாதமில்லை. சிலது எதிர்பார்த்ததைவிட சூப்பராகவும் சிலது சொதப்பலாகவும் வரலாம். அப்படியெல்லாம் இல்லாமல் முதல் முயற்சியிலேயே ஆஹா... பிரமாதம் என உங்களுக்குப் பாராட்டுகளை வாங்கிக் கொடுக்கக்கூடியது இந்த மங்களூரு பன்.

எப்படிச் செய்வது?

இரண்டு பழுத்த வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதை நன்றாக மசித்துக்கொள்ளவும். இதில் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இரண்டு கப் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கைகளைப் பயன்படுத்தி, மென்மையான மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி போட்டு 2 - 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு மாவிலிருந்து சிறிய உருண்டையை எடுத்து, பூரி போல் தேய்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, பூரியைப் போட்டு நடுத்தர தீயில் பொரிக்கவும். மறுபுறம் திருப்பி சிறிது நிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

தேங்காய்ச் சட்னி அல்லது ஒரு கப் தேநீருடன் ரிலாக்ஸ் டைமில் பரிமாறவும். அனைவருக்கும் ஏற்ற இது நாள் முழுக்க புத்துணர்ச்சி தரும்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 7 செப் 2021