மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை!

ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை!

பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், பள்ளி திறக்கப்பட்ட நாளிலிருந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்வது அதிகரித்து வருகிறது. இது, மீண்டும் பள்ளிகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பள்ளிகள் திறந்ததால்தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது தவறானது. ஏற்கனவே தொற்று இருப்பவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், "கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணியினை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் தவறாமல் கண்காணித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் தவறாமல் முதன்மை கல்வி அலுவலர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு உள்ள பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பள்ளிகளைக் கண்காணித்து இதுகுறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 7 செப் 2021