மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: பிஸ்கட் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: பிஸ்கட் கொழுக்கட்டை

மோமோஸ் மோகத்தில் அவற்றை வாங்கிச் சாப்பிடும் இந்தத் தலைமுறைக்கு கொழுக்கட்டையின் நவீன வடிவம்தான் மோமோஸ் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வித்தியாசமான பிஸ்கட் கொழுக்கட்டை செய்துகொடுத்து அசத்தலாம். கொழுக்கட்டையின் அருமையைப் புரியவைக்கலாம்.

என்ன தேவை?

மாரி போன்ற ஏதாவது ஒரு பிஸ்கட் - 10

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

பால் - 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா அல்லது பிஸ்கட் எசென்ஸ் - அரை டீஸ்பூன்

உலர்ந்த தேங்காய்ப்பூ (டெஸிக்கேட்டடு கோகனட் என கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்

கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பிஸ்கட்டை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நைசாக பொடி செய்யவும். பொடித்த பிஸ்கட்டுடன், நெய், எசென்ஸ் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். தேங்காய்ப்பூவில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிஸ்கட் மாவை கொழுக்கட்டை அச்சில் அடைத்து நடுவில் தேங்காய்ப்பூ ஃபில்லிங்கை வைத்து கொழுக்கட்டைகளாகச் செய்து எடுக்கவும்.

நேற்றைய சண்டே ஸ்பெஷல் - பனீர் கொழுக்கட்டை!

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 7 செப் 2021