மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

ஆவணங்களில் தாயின் பெயர்: அரசுக்கு உத்தரவு!

ஆவணங்களில் தாயின் பெயர்: அரசுக்கு உத்தரவு!

அரசுத் துறைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயின் பெயரைக் குறிப்பிடும் வகையில் தனிப்பிரிவு ஏற்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ‘திருமணம், புனித நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய் மற்றும் தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள், கல்வி, வங்கி ஆவணங்கள், இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், பூர்வீக சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டம், ஆண் பெண் இரு பாலருக்கும் சம உரிமை வழங்கியுள்ள நிலையில், சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர் கேட்கப்படவில்லை’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திருமணமாகாத அல்லது கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது தந்தை குறித்த விவரங்களைக் கோர முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், “நாட்டை தாய் நாடு என்றும் மொழியைத் தாய் மொழி என்றும் நதியைப் பெண்கள் பெயரிலும் அழைக்கும் சூழலில் அனைத்து அரசுத் துறை ஆவணங்களில், விண்ணப்ப சான்றிதழ்களில் தாயின் பெயரைக் குறிப்பிடும் வகையில் உரியச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-பிரியா

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

திங்கள் 6 செப் 2021